சேலம் மாவட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை


சேலம் மாவட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 9 May 2020 4:43 AM GMT (Updated: 9 May 2020 4:43 AM GMT)

சேலம் மாவட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை.

சேலம்,

தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னிசியன் அசோசியேசன் சேலம் மேற்கு மண்டல தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் நந்தகோபால் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த 40 நாட்களுக்கு மேலாக எலக்ட்ரானிக்ஸ் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் தனிக்கடைகள் மட்டும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் உள்ளனர். எலக்ட்ரானிக்ஸ் கடைகள் திறக்கப்படாததால் பழுதான டி.வி.க்களை சரிசெய்ய முடியவில்லை. மேலும் எலக்ட்ரானிக்ஸ் சம்மந்தமான அனைத்து வேலைகளும் செய்ய முடியாமல் உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடைகளை திறக்க உரிய அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் நோய்த்தொற்று பரவாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அரசின் அனைத்து சட்டதிட்டங்களையும் பின்பற்றுவோம் என தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது கடையில் 2 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் எலக்ட்ரானிக்ஸ் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story