பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ரூ.2¾ கோடிக்கு மது விற்பனை
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.2¾ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.2¾ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடைகள் திறப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு நிபந்தனைகளுடன், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது. இதன்படி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் 35 டாஸ்மாக் கடைகளில், 34 கடைகளும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 53 டாஸ்மாக் கடைகளில் 26 கடைகளும் திறக்கப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றது. இதனால் நேற்று முன்தினம் காலை மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னதாகவே கடை முன்பு கூடினர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
ரூ.2¾ கோடிக்கு மது விற்பனை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 கோடியே 42 லட்சத்து 69 ஆயிரத்து 10 ரூபாய்க்கும், அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 330 ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 340-க்கு மது பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
Related Tags :
Next Story