கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு திரும்பினார் - அமைச்சர் நிலோபர் கபில் வரவேற்றார்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணமடைந்து வீடு திரும்பினார். அவரை அமைச்சர் நிலோபர் கபில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக் கப்பட்டு வருகிறது. இங்கு 350 படுக்கை வசதிகள் உள்ளன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவருக்கு கடந்த மாதம் 23-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருடன் பணியாற்றி வந்த ஆண், பெண் காவலர்கள் உள்பட 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர், நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை மருத்துவக்கல்லூரி டீன் செல்வி, மருத்துவ மனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்டோர் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.
குணமடைந்து வீடு திரும்பிய பெண் இன்ஸ்பெக்டருக்கு வாணியம்பாடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி கலெக்டர் காயத்ரிசுப்ரமணி, தாசில்தார் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ், நகர அ.தி.மு.க. செயலாளர் சதாசிவம் உள்ளிட்டோர் பூங்கொத்து, பழங்களை கொடுத்து வரவேற்றனர்.
Related Tags :
Next Story