மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் - 3 பேர் கைது + "||" + Murder of Panchayat Leader -3 arrested

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் - 3 பேர் கைது

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் - 3 பேர் கைது
சாணார்பட்டி அருகே வி.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரையும் போலீசார் கைது செய்தார்.
கோபால்பட்டி,

சாணார்பட்டி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது 60). இவர், வி.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அதே ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருப்பவர் கார்த்திகேயன் (30). இவரது மனைவி திவ்யா, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணி பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே திவ்யாவை அந்த பணியில் இருந்து சின்னையா நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்களான தமிழ்நேசன் (30), வீரமணி (22) ஆகியோர், சின்னையா வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சின்னையா அளித்த புகாரின் பேரில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் உள்பட 3 பேரையும் கைது செய்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை