பெண் டாக்டருக்கு கொரோனா: விருத்தாசலம் மருத்துவமனை மூடல்


பெண் டாக்டருக்கு கொரோனா: விருத்தாசலம் மருத்துவமனை மூடல்
x
தினத்தந்தி 10 May 2020 3:13 AM IST (Updated: 10 May 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் பணி யாற்றிய மருத்துவமனை மூடப்பட்டது.

விருத்தாசலம்,

கொலைகார கொரோனா உலகம் முழுவதும் மனித உயிர்களை குறி வைத்து வேட்டையாடி கொண்டு இருக்கிறது. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு டாக்டர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த தொழிலாளர்கள் பலருக்கு தொற்று உறுதி யானது. மேலும் பலருக்கு ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோத னைக்கு அனுப்பப்பட்டது. இந்த பணியில் மங்கலம் பேட்டை வட்டார மருத்துவ மனை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெண் டாக்டருக்கு தொற்று

இந்த பணியில் விருத்தாசலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் ஒருவரும் தீவிரமாக களப் பணியாற்றினார். நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங் களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது போன்ற பணிகளில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி யானது. இதையடுத்து அந்த பெண் டாக்டர் பணியாற்றிய மருத்துவமனை நேற்று மூடப்பட்டது. இந்த மருத்துவ மனை மூடப்பட்டதால் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் தற்போது சிகிச்சை பெற வேறு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

மேலும் அந்த டாக்டருடன் பணியாற்றிய சக டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே அந்த டாக்டருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப் படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். அதுமட்டுமில்லா மல் மூடப்பட்ட மருத்துவ மனையை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து புதிய மருத்துவக்குழுவினரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க் கின்றனர்.

Next Story