காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 May 2020 4:15 AM IST (Updated: 10 May 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவ கழிவுகளை கையாளுதல், சேமித்தல் மற்றும் வெளியேற்றுதல் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 65 பேர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு முறையான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அறிகுறிகள் குறைவாக காணப்படுவதால் விரைவாக குணமடைந்து வீடு திரும்பும் நிலையில் உள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதையும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்...

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அனுமதி அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தால் வழங் கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தேவைகளுக்கு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, துணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) ஜீவா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கல்பனா ஆகியோர் உடன் இருந்தார்.


Next Story