புதுச்சேரியில் மேலும் ஒரு வாலிபருக்கு கொரோனா கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்


புதுச்சேரியில் மேலும் ஒரு வாலிபருக்கு கொரோனா கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்
x
தினத்தந்தி 9 May 2020 10:42 PM GMT (Updated: 9 May 2020 10:42 PM GMT)

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பிய புதுவை செல்லிப்பட்டை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் ஏற்கனவே இரண்டு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது செல்லிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வெளி மாநிலத்தில் வசிக்கும் சுமார் 2,500 பேர் புதுவை திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களை பரிசோதித்து உதவி அளிக்க திட்டமிட்டுள்ளோம். மக்கள் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்திற்கு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

நமது செயல்பாட்டை கண்டு மத்திய அரசு அதிகாரிகள் வியந்துள்ளனர். எல்லை பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ குழுவினர் இருந்து யார் யாரை புதுவைக்குள் அனுமதிப்பது என்பது குறித்து சோதித்து வருகிறார்கள். அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் கூறியதாவது:-

கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரவில்லை

புதுவையில் 4 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா சோதனை நடத்தி உள்ளோம். தற்போது கிராம பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணி புரிந்து விட்டு புதுவை திரும்பியுள்ளார். அவர் தொற்று அறிகுறியுடன் இருந்ததால் நேராக ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரை சோதித்து பார்த்தபோது தொற்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நல்ல வேளையாக அவர் சொந்த ஊருக்குள் செல்ல வில்லை. அவர் அங்கு செல்லாததால் செல்லிப்பட்டு கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

3 ஆக உயர்வு

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் புதுவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Next Story