ஆம்பூர் அருகே 3,500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


ஆம்பூர் அருகே 3,500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
தினத்தந்தி 10 May 2020 5:54 AM IST (Updated: 10 May 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே 3,500 குடும்பங்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார்.

ஆம்பூர், 

ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 3,500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்குதல் மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் தேவலாபுரம் ஈ.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, தாசில்தார் செண்பகவல்லி, ஊர் பெருந்தனக்காரர் முனிரத்தினம், ஊர் தலைவர் துளசி, நாட்டாண்மை தாமோதரன், துணை தலைவர்கள் முருகேசன், உமாபதி, தேவலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சுந்தரா வெங்கடேசன், துணை தலைவர் சவுந்தரராஜன், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர்கள், அ.தி.மு.க.நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story