கொரோனா பாதித்தவர் குணம் அடைந்தார்: நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் தடை நீக்கம்


கொரோனா பாதித்தவர் குணம் அடைந்தார்: நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் தடை நீக்கம்
x
தினத்தந்தி 10 May 2020 9:39 AM IST (Updated: 10 May 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதித்தவர் குணம் அடைந்தார்: நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் தடை நீக்கம் தடுப்புகள் அகற்றப்பட்டன.

நாமக்கல்,

நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் கடந்த மாதம் கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு ‘சீல்’ வைத்தனர். அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் இரும்பு தகடுகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தினர். தற்போது அந்த கர்ப்பிணி கொரோனாவில் இருந்து மீண்டும் குணமாகி வீடு திரும்பி விட்டார். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து 28 நாட்கள் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே சுகாதாரத்துறையினர் அப்பகுதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி விட்டனர். மேலும் இரும்பு தகடுகளால் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே நாமக்கல் மஜித்தெரு, குட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் தடையை நீக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மஜித்தெரு, தட்டாரத்தெரு, குட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அகற்றப்பட்டன.

Next Story