நாசரேத் அருகே, மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


நாசரேத் அருகே, மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2020 4:00 AM IST (Updated: 11 May 2020 12:39 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாசரேத், 

நாசரேத் அருகே உள்ள ஞானராஜ் நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50) மீன் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தினால் கடந்த 7-ந் தேதி தன்னுடைய மனைவி அந்தோணி கலாவிடம் மது அருந்த செல்வதாக தெரிவித்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் மறுநாள் தங்கராஜ் ஆட்டிற்கு இரை எடுக்க செல்வதாக தெரிவித்து விட்டு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் மீது பூச்சி மருந்து வாசனை (விஷம்) அடித்த காரணத்தினால், தங்கராஜின் மகன் அந்தோணி விஜயராஜ் தந்தையிடம் விசாரித்துள்ளார். அப்போது தங்கராஜ் மது அருந்தி விட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக கூறியுள்ளார்.

உடனே அவரை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தோணி விஜயராஜ் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story