தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 11 May 2020 3:45 AM IST (Updated: 11 May 2020 12:39 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 27 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அதன்பிறகு 18 நாட்களாக புதிய தொற்று ஏற்படாமல் இருந்தது. 

கடந்த 6-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 2 பேருக்கும், 7-ந் தேதி மேலும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து இருந்தது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் யாருக் கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

புதிய தொற்று இல்லை

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

Next Story