விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தி.மு.க. பிரமுகர் பலி
விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தி.மு.க.பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 54). தி.மு.க. கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கட்டண கழிவறையை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தார். நேற்று காலை வேலு மருத்துவமனையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். மருத்துவமனை அருகே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள், வேலுவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Tags :
Next Story