தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு


தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2020 4:09 AM IST (Updated: 11 May 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

அரசூரில் தனிமைப்படுத்தும் மையத்தில் உள்ளவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

அரசூர்,

விழுப்புரம் மாவட்டம் அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விழுப்புரம், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மையத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் உணவுக்கூடம், பரிசோதனைக்கூடம், மருந்து கிடங்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், மையத்தை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மருத்துவக்கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு தரமான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை முறையாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அடிப்படை வசதிகள்

இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை, தனிமைப்படுத்தவர்களிடம், மருத்துவ பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மையத்தில் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அது பற்றி தெரிவிக்கலாம் என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார். வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி, மருத்துவ அலுவலர் சத்ரபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலி பேக், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story