செய்யாறு சுகாதார மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 10 பேருக்கு கொரோனா அறிகுறி
செய்யாறு சுகாதார மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 10 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது தெரியவந்துள்ளது.
செய்யாறு,
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை அழைத்து வந்து செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வந்தவாசி, ஆரணி ஆகிய பகுதியில் தனிமைப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என கண்டறிய சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று வந்த பரிசோதனை முடிவில் 10 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளது தெரிய வந்துள்ளது. வந்தவாசி தாலுகா தென்சேந்தமங்கலத்தை சேர்ந்த 29 வயது வாலிபர், குண்ணகம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் உள்பட 4 பேருக்கும், பிருதூர் கிராமத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவர், சாலவேடு கிராமத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒருவர், சேனல் கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய இளம்பெண், பெரணமல்லூர் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண், செய்யாறு தாலுகா சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் என 10 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது தெரியவந்தது. உடனடியாக அவர்களை செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் சேர்த்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இங்கு 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story