புத்தூர் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்கள்


புத்தூர் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 May 2020 8:42 AM IST (Updated: 11 May 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

திருச்சி, 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கடைகளில் அதிகமானோர் கூடுவார்கள் என்பதால் கடந்த 6 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

ஆனால் நேற்று விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் வராததால் வழக்கம்போல் இறைச்சி மற்றும் மீன்கடைகளை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர்.

திருச்சி புத்தூர் மீன்மார்க்கெட்டில் நேற்று ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்தனர். ஆனால் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் வந்து இருந்தனர். 

இதையடுத்து புத்தூர் மீன்மார்க்கெட்டுக்கு வந்த உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ், மீன் வாங்க வரும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு வியாபாரிகளிடம் கூறினார். தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வியாபாரிகளும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Next Story