எர்ணாபுரத்தில் 79 ஏழை பெண்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு மாஜிஸ்திரேட்டுகள் வழங்கினர்


எர்ணாபுரத்தில் 79 ஏழை பெண்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு மாஜிஸ்திரேட்டுகள் வழங்கினர்
x
தினத்தந்தி 11 May 2020 8:55 AM IST (Updated: 11 May 2020 8:55 AM IST)
t-max-icont-min-icon

எர்ணாபுரத்தில் 79 ஏழை பெண்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு மாஜிஸ்திரேட்டுகள் வழங்கினர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக எர்ணாபுரம் ஊராட்சியில் ஏழை எளியோருக்கு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாஜிஸ்திரேட்டுகள் ஜெயந்தி, கானலீஸ்வரன், முதன்மை மாவட்ட முன்சிப் விஜய் அழகிரி, கூடுதல் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு 79 ஏழை பெண்களின் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினர்.நிகழ்ச்சியில் நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து, ஊராட்சி தலைவர் மாரப்பன், கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பயனாளிகள் அனைவரும் எர்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதேபோல நாமக்கல் எம்.ஜி.ஆர். நகரில் மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரிசி, பருப்பு மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன. 

Next Story