கல்லல் யூனியன் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
கல்லல் யூனியன் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
காரைக்குடி,
கல்லல் ஊராட்சியில் மாவட்ட மருத்துவத்துறையின் மூலம் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கல்லல் ஊராட்சி ஒன்றியப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கல்லல் வாரச்சந்தை வளாகத்தில் பிச்சம்மை கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேசுவரன், தேவகோட்டை ஆர்.டி.ஓ.சுரேந்திரன், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அசோகன், கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், கூட்டுறவு அச்சகச்சங்கத் தலைவர் சசிக்குமார், பிச்சம்மை கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தலைவர் சரவணன், காரைக்குடி தாசில்தார் பாலாஜி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் சேவியர், குணசேகரன், 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை மேலாளர் ரஞ்சித், கல்லல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணபவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story