ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறப்பு இயல்பு நிலை திரும்புகிறது
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இயல்பு நிலை திரும்புகிறது.
திருவாரூர்,
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இயல்பு நிலை திரும்புகிறது.
ஊரடங்கு தளர்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. அதிலும் கால நிர்ணயம் செய்யப்பட்டதால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் 40 நாட்கள் கடுமையான கட்டுபாடுகள் இடையே கடந்த 4-ந் தேதி முதல் பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்வு செய்து அரசு தினமும் அறிவித்து வருகிறது.
இயல்பு நிலை திரும்புகிறது
இதில் சலூன் கடை, அழகு நிலையம் தவிர டீக்கடைகள், ஓட்டல்கள், தனிக்கடைகளை திறக்கவும், கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் சுதந்திரமாக கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
போலீசாரும் தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தி கொண்டனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக சுமார் 47 நாட்களுக்கு பிறகு திருவாரூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
Related Tags :
Next Story