தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு தேவேகவுடா கடிதம்


தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு தேவேகவுடா கடிதம்
x
தினத்தந்தி 12 May 2020 5:30 AM IST (Updated: 12 May 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவாக இருக்கிறது. இத்தகைய சவாலான நேரத்தில் அரசு செயல்படும் விதத்தை நான் பாராட்டுகிறேன். இத்தகைய நெருக்கடியான நேரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக விமர்சிப்பதை கைவிட்டு, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நீங்கள் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளர்கள். இதை நான் வரவேற்கிறேன். அதேபோல் ஊரடங்கால் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தரமான கல்வியை வழங்குவதில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.

பாக்கி ரூ.1,300 கோடி

அந்த ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. அதனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய பாக்கி ரூ.1,300 கோடியை உடனே வழங்க வேண்டும்.

இந்த நிதி உதவியை வழங்கினால், தனியார் பள்ளி களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். நீங்கள் உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி ஆசிரியர் களின் நலனை காக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Next Story