தேசிய அளவிலான விருதுகள் பெற விளையாட்டு வீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு


தேசிய அளவிலான விருதுகள் பெற விளையாட்டு வீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 12 May 2020 7:51 AM IST (Updated: 12 May 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான விருதுகள் பெற விளையாட்டு வீரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு.

புதுச்சேரி,

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் (விளையாட்டு மற்றும் இளைஞர் பணி) துணை இயக்குனர் நரசிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறையால் விளையாட்டு துறையில் சிறந்த வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய அளவிலான உயரிய விருதுகளான அர்ஜூனா விருது, துரோணாச்சாரிய விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஷாசன் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

2020-ம் ஆண்டின் மேற்கூறிய விருதுகளுக்குரிய விவரங்களையும், விண்ணப்பங்களையும் https://yas.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Next Story