திருச்சி மாவட்டம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய கிராம நிர்வாக அதிகாரிகள்
திருச்சி மாவட்டம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து கிராம நிர்வாக அதிகாரிகள் பணியாற்றினார்கள்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து கிராம நிர்வாக அதிகாரிகள் பணியாற்றினார்கள்.
கருப்பு பட்டை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பழங்கனாங்குடி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தனசேகர். இறந்த ஒரு கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் உடனே வழங்கவில்லை என கூறி திருவெறும்பூர் தாசில்தாரால் இவருக்கு பணி விடுப்பு வழங்கப்பட்டது. திருச்சி ஆர்.டி.ஓ. அவரை வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்து உள்ளார்.
இந்நிலையில் அரசு விதி முறைகளுக்கு மாறாக கிராம நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது பணி மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கோரியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று கிராம நிர்வாக அதிகாரிகள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினார்கள்.
11 தாலுகாக்கள்
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, லால்குடி, மண்ணச்சநல்லூர் உள்பட மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அதிகாரிகள் கருப்பு பட்டை அணிந்து சமூக இடைவெளி யுடன் நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 450 கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணியாற்றியதாக சங்கம் சார் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story