திருப்பூர் மாநகரில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 5 ஆக குறைந்தது


திருப்பூர் மாநகரில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 5 ஆக குறைந்தது
x
தினத்தந்தி 13 May 2020 4:00 AM IST (Updated: 13 May 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 5 ஆக குறைந்துள்ளது.

திருப்பூர், 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்பு பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதியை சுற்றிலும் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வருவாய்த்துறையினர் மூலமாக கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும், மற்றவர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மாநகராட்சி பகுதியில் சுகுமார்நகர், மணியக்காரம்பாளையம், பெரியதோட்டம், பாத்திமாநகர், பெரியகடைவீதி,சிங்காரவேலன் நகர், சிக்கண்ணா கல்லுரி பின்புறம், இந்திரா வீதி குமரானந்தபுரம், சாரதாநகர், கே.என்.எஸ்.கார்டன், கோம்பை தோட்டம், குலாம்காதர் கார்டன் ஆகிய 12 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்டு 28 நாட்கள் அந்த பகுதியில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாவிட்டால் கட்டுப்பாட்டு பகுதி தளர்வு செய்யப்பட்டு தடுப்புகள் அகற்றப்படும். அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 7 கட்டுப்பாட்டு பகுதிகள் அகற்றப்பட்டு விட்டது. தற்போது பெரியதோட்டம், பெரியகடைவீதி, பாத்திமாநகர், குலாம்காதர் கார்டன், சாரதாநகர் ஆகிய 5 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று மாநகர் நல அதிகாரி பூபதி தெரிவித்துள்ளார்.


Next Story