தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி பொதுமக்கள் பாராட்டு


தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 13 May 2020 4:21 AM IST (Updated: 13 May 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

உலக செவிலியர் தினத்தையொட்டி தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு, பொதுமக்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

தஞ்சாவூர், 

உலக செவிலியர் தினத்தையொட்டி தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு, பொதுமக்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

உலக செவிலியர் தினம்

உலக செவிலியர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் நேற்று காலை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படம் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உறுதிமொழியை தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில செயலாளர் வளர்மதி வாசிக்க, கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அனைத்து செவிலியர்களும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், செவிலியர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களின் பணிகளை பாராட்டியதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இதனையடுத்து செவிலியர்களும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

சான்றிதழ், கவச உடை

இதேபோல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி செவிலியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கவச உடை, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், பழங்கள் போன்றவை வழங்கப்பட்டன. இவைகளை செவிலியர்களுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி கொரோனா தடுப்பு அலுவலர் டாக்டர் குமுதா லிங்கராஜ் தலைமை தாங்கினார். முதல்வர்(பொறுப்பு) டாக்டர் மருததுரை வரவேற்றார்.

இதில் நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story