கோட்டுச்சேரியில் வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது


கோட்டுச்சேரியில் வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2020 4:30 AM IST (Updated: 13 May 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

கோட்டுச்சேரியில் வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது.

காரைக்கால்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மதுக்கடைகள், சாராயக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மதுபோதைக்கு அடிமையான சிலர் வயல்வெளி, காட்டுப்பகுதி, வீடுகளில் சாராயம், மதுபானம் தயாரித்து குடிக்கின்றனர். இதனை போலீசார் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பூவம் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் உத்தரவின் பேரில், கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் அந்த வீட்டுக்குள் திடீரென்று புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 45), செல்வம் (48) ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story