திருச்சியில் ஒரு வாரம் தனிமை ஓய்வில் இருந்த 480 போலீஸ்காரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மீண்டும் பணியில் சேர்ந்தனர்


திருச்சியில் ஒரு வாரம் தனிமை ஓய்வில் இருந்த 480 போலீஸ்காரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மீண்டும் பணியில் சேர்ந்தனர்
x
தினத்தந்தி 13 May 2020 8:21 AM IST (Updated: 13 May 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள ஊரடங்கு வேளையில் போலீசார் திருச்சி மாநகரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருச்சி, 

திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள ஊரடங்கு வேளையில் போலீசார் திருச்சி மாநகரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வாரம் ஒருமுறை என சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் 7 நாட்கள் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5-ந் தேதி முதல் 480 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு வாரம் ஓய்வில் இருந்தனர். 

இந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் டாக்டர்களால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை அளவீடு செய்யப்பட்டது. பின்னர் நேற்று முதல் 480 போலீசாரும் மீண்டும் திருச்சி நகரில் பணியில் அமர்த்தப்பட்டனர். 

இதுபோல திருச்சி மாநகரில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தினமும் கொரோனா மருத்துவ பரிசோதனையை 5 டாக்டர்களை கொண்ட குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஓய்வு பெற்ற காவல்துறையில் பணியாற்றியவர்களும் கலந்து கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story