கொரோனா நிவாரண உதவி வழங்க கோரி இசைக்கருவிகளை வாசித்து சவர தொழிலாளர்கள் போராட்டம்


கொரோனா நிவாரண உதவி வழங்க கோரி இசைக்கருவிகளை வாசித்து சவர தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 May 2020 3:00 AM GMT (Updated: 13 May 2020 3:00 AM GMT)

கொரோனா நிவாரண உதவி வழங்க கோரி இசைக்கருவிகளை வாசித்து சவர தொழிலாளர்கள் போராட்டம்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட சவர தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் இவர்கள் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இவர்களுடைய குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. சவர தொழிலாளர்களில் பலர் நாதஸ்வரம், தவில் ஆர்மோனிய இசை கலைஞர்களாகவும் உள்ளனர். இந்த தொழிலும் தற்போது பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இதன் காரணமாக தங்கள் குடும்பங்களை காப்பாற்ற அரசு உரிய நிவாரண உதவி வழங்க கோரி பாப்பாரப்பட்டி புதூர் பகுதியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவில் வளாகம் முன்பு இவர்கள் சமூக இடைவெளியுடன் முகசவரம் செய்தும், இசைக் கருவிகளை இசைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story