தாரமங்கலம் அருகே தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை தம்பி கைது
தாரமங்கலம் அருகே தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தாரமங்கலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). கயிறு திரிக்கும் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இவரது தம்பி பெருமாள் (45). கூலித்தொழிலாளி. இவர் மனைவியுடன் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.
கொலை
பெருமாள் அடிக்கடி அண்ணன் சுப்பிரமணியுடன் தகராறு செய்வார். இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி குடிபோதையில் பெருமாள், அவரது மாமனார் அண்ணாமலையிடம் தகராறு செய்தார். இதை சுப்பிரமணி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள் கட்டையால் அண்ணனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த கொலை குறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். பின்னர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story