கடலூர் அரசு மருத்துவமனைக்கு 2 வென்டிலேட்டர் ரோட்டரி சங்கங்களின் சார்பில் வழங்கப்பட்டது


கடலூர் அரசு மருத்துவமனைக்கு 2 வென்டிலேட்டர் ரோட்டரி சங்கங்களின் சார்பில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 14 May 2020 3:41 AM IST (Updated: 14 May 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு மருத்துவமனைக்கு 2 வென்டிலேட்டர் ரோட்டரி சங்கங்களின் சார்பில் வழங்கப்பட்டது.

கடலூர்,

ரோட்டரி மாவட்டம்-2981 சார்பில் பன்னாட்டு நிதியை பயன்படுத்தி பெறப்பட்ட 2 வென்டிலேட்டர்கள் மற்றும் 6 வென்டிலேட்டர் சிறப்பு முக கவசங்கள், என் 95 வகையை சேர்ந்த 350 முக கவசங்களை மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் மணிமாறன் வழிகாட்டுதல்படி கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஆளுநர் அப்பர்சாமி தலைமை தாங்கினார். கடலூர் ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் வீரப்பன், வெங்கடேசன், நடனம், பத்மகுமார் சந்தோஷ்குமார், அகிலன், செயலாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் எஸ்.பிரையோன் கலந்து கொண்டார். இதையடுத்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா ஆகியோரிடம் வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கமம் வெங்கடேஷ், டாக்டர் தம்பையா, எஸ்.ஆர்.ரவி, ஜெயப்பிரகாஷ், பிரகாஷ், கடலூர் சங்கம் மண்டல செயலாளர் ஜெயசங்கர், டாக்டர் கேசவன், கோஸ்டல் சிட்டி ஜெயக்குமார், ரவி, கலைசெல்வம், மிட்டவுன் கிருஷ்ணராஜ், பண்ருட்டி சண்முகம், அசோக் ராஜ், ஜெயின் சென்ட்ரல் பா.ராசன், சிட்டு சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story