திண்டிவனம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு
திண்டிவனம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு.
மயிலம்,
திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுகடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மதுவிலக்கு போலீசாரால் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான 1,500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் நேற்று அழிக்கப்பட்டது. அதன்படி திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தாயுமானவர் முன்னிலையில் ஜக்காம்பேட்டை ஏரியில் கொட்டப்பட்டு டிராக்டர் மூலம் பாட்டில்கள் மீது ஏற்றி அழிக்கப்பட்டது. இந்த பணியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) விஷ்ணுபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story