கொரோனா பிரச்சினை முடிந்ததும் தேசிய அளவில் அரசியல் பூகம்பம் ஏற்படும் - சந்திரகாந்த் பாட்டீல் சொல்கிறார்


கொரோனா பிரச்சினை முடிந்ததும் தேசிய அளவில் அரசியல் பூகம்பம் ஏற்படும் - சந்திரகாந்த் பாட்டீல் சொல்கிறார்
x
தினத்தந்தி 14 May 2020 4:48 AM IST (Updated: 14 May 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பிரச்சினை முடிந்ததும் தேசிய அளவில் அரசியல் பூகம்பம் ஏற்படும் என மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.

மும்பை, 

பாரதீய ஜனதாவில் ஓரங்கப்பட்டு வரும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேயை காங்கிரசில் சேர அக்கட்சியின் மாநில தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் நேற்று அழைப்பு விடுத்தார்.

இது பாரதீய ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:-

ஒரு மாநில அளவிலான காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கட்சேயை கவர்ந்து இழுக்க முயற்சிப்பதாக நான் கேள்விபட்டேன்.

ஏக்நாத் கட்சே பல ஆண்டுகளாக பாரதீய ஜனதாவின் அசைக்க முடியாத தலைவராக இருந்தார் என்பதை அவர் அறிந்து கொள்ளவேண்டும்.

அரசியல் பூகம்பம்

கொரோனா பிரச்சினை முடிந்ததும் மராட்டியம் உள்பட தேசிய அளவில் அரசியல் பூகம்பம் ஏற்படும். பல காங்கிரஸ் தலைவர்கள் பாரதீய ஜனதாவில் சேருவார்கள். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறையும் வரை பாரதீய ஜனதா அதற்காக காத்திருக்கிறது. எனவே மாநில காங்கிரஸ் தலைமை தனது அணியை ஒற்றுமையுடன் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story