எங்களது கொள்கையை ஏற்று வந்தால் ஏக்நாத் கட்சேயை காங்கிரஸ் வரவேற்கும் - பாலசாகேப் தோரட் பேட்டி


எங்களது கொள்கையை ஏற்று வந்தால் ஏக்நாத் கட்சேயை காங்கிரஸ் வரவேற்கும் - பாலசாகேப் தோரட் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2020 4:57 AM IST (Updated: 14 May 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

எங்களது கொள்கையை ஏற்று வந்தால் ஏக்நாத் கட்சேயை வரவேற்போம் என மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் தெரிவித்துள்ளார்.

மும்பை, 

பாரதீய ஜனதாவின் சக்திவாய்ந்த தலைவராக திகழ்ந்த ஏக்நாத் கட்சே கடந்த சில ஆண்டுகளாகவே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

வருகிற 21-ந் தேதி நடைபெறும் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்தார். இருப்பினும் அவருக்கு கட்சி மேலிடம் ‘சீட்’ கொடுக்கவில்லை.

இதனால் கட்சி தலைமை மீது ஏக்நாத் கட்சே மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளார். கொரோனா பிரச்சினைக்கு பின் தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

காங்கிரசில் வரவேற்பு

இந்தநிலையில், காங்கிரசில் ஏக்நாத் கட்சேவுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏக்நாத் கட்சே எனது பழைய நண்பர். நாங்கள் 1990-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்தில் ஒன்றாக இருந்தோம். அவர் எதிர்க்கட்சியின் திறமையான தலைவராக இருந்தார். அவர் வெகுஜன ஆதரவு கொண்ட தலைவர். காங்கிரசின் கொள்கையை ஏற்று வந்தால் அவரை நாங்கள் வரவேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story