கொரடாச்சேரியில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்


கொரடாச்சேரியில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 14 May 2020 5:42 AM IST (Updated: 14 May 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரியில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரடாச்சேரி, 

கொரடாச்சேரியில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை சாகுபடி பணிகள்

காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருந்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து மண் உழவு செய்தல், விதை விடுதல், நாற்று பறித்தல், நடவு நடுதல் உள்ளிட்ட பணிகள் சமூக இடைவெளியுடன் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட என்கண், காப்பணாமங்கலம், முகந்தனூர் உள்ளிட்ட இடங்களில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஆறு, குளங்களை தூர்வாரியதாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்த நிலையில் முறையான நீர் மேலாண்மை செய்யப்பட்டதாலும் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு நெல் உற்பத்தி அதிகரித்தது. தற்போது இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. மேலும் டெல்டா பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறோம். எனவே பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள மேட்டூர் அணையில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story