துறையூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


துறையூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2020 9:26 AM IST (Updated: 14 May 2020 9:26 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துறையூர், 

துறையூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

துறையூர் அருகே குருவிக்காரன் குளத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சரண்யா(வயது 27). 9 மாத கர்ப்பிணியான இவர் கடந்த 11-ந்தேதி மாலை கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற சரண்யா, அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த புலிவலம் போலீசார், சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் குடித்த முதியவர் சாவு

* புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாக்கத்தை சேர்ந்த மணி(65) சம்பவத்தன்று தண்ணீர் என்று நினைத்து பெட்ரோலை குடித்து மயங்கி விழுந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

* கல்லக்குடி அருகே மால்வாய் வடக்கு தெருவை சேர்ந்த பவுன்ராஜ்(44) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடைகளுக்கு சீல்

* திருச்சி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடிக்காத 18 கடைகள் நேற்று முன்தினம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இதுவரை அரசு உத்தரவை மீறி சமூக இடைவெளியை பின்பற்றாமல் வணிகம் செய்த 140 வணிக கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

450 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

* துறையூர், தொட்டியம், வாத்தலை, லால்குடி போலீசார் மற்றும் திருவெறும்பூர் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் சாராயம் காய்ச்சியதாகவும், சாராயம் காய்ச்ச முயன்றதாகவும் 12 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 450 லிட்டர் சாராய ஊறலும், 182 லிட்டர் சாராயமும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

* திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்றதாக புதுகாலனியை சேர்ந்த தினேஷ்(25), மணி(25) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டன.

904 வழக்குகள் பதிவு

* ஊரடங்கு உத்தரவை மீறி தெருக்களில் கூடியவர்கள், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமலும், போக்குவரத்து விதிகளை மீறியும் அதிவேகமாக சென்றவர்கள் என்று மாவட்ட காவல்துறையால் மொத்தம் 904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் இதுவரை 20,456 பேர் மீது 18,871 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 9,608 வாகனங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

5 பேர் கைது

* அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மணப்பாறையில் பெரியார் சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் பாலு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற மணப்பாறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

Next Story