மாவட்ட செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் + "||" + Protective equipment for purity workers on behalf of Vijay People's Movement

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.
பாப்பாரப்பட்டி,

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாப்பாரப்பட்டியில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், போலீசாருக்கு உணவு, கையுறைகள், முககவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர விவசாய அணி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துகுமார், பென்னாகரம் துணை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இயக்க நிர்வாகிகள் செந்தில்குமார், சபரிநாதன், செல்வம், அருள், கம்பைநல்லூர் நகர தலைவர் செல்வம், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு 200 பேருக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா செய்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்

1. வாரச்சந்தைகளை திறக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்
வாரச்சந்தைகளை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடந்தது.
2. நெல்லையில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்
நெல்லையில் சுதந்திர தினத்தையொட்டி, பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
3. பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை