மேச்சேரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன? தேடும் பணி தீவிரம்


மேச்சேரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 May 2020 5:31 AM GMT (Updated: 14 May 2020 5:31 AM GMT)

மேச்சேரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

மேச்சேரி,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நாகோசிப்பட்டி வெடிகாரனூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நேற்று மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான நாகோசிப்பட்டி அருகிலுள்ள கொக்கரா பள்ளம் என்ற பகுதிக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

கதி என்ன?

அதில் 24 வயதுடைய ஒருவர் ஆற்றில் மூழ்கி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொருவர் ஆற்றில் இருந்து கரைக்கு வந்தார். பின்னர் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் மேச்சேரி போலீசார், மேட்டூர் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மதியம் 3 மணி முதல் பரிசலில் சென்று தீவிரமாக தேடினர். ஆனால் நீண்டநேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு ஆகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தி விட்டனர். மீண்டும் தேடும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கும் என தெரிகிறது. ஆற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன? என்று தெரியவில்லை.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story