மாவட்டத்தில் 4 இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் 4 இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 May 2020 1:04 PM IST (Updated: 14 May 2020 1:04 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 4 இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி, 

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை கண்டித்தும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு வழி ஏற்படுத்தும் வகையில் இந்த உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் 4 இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் காரல்மார்க்ஸ், தாலுகா தலைவர் முத்துக்குமார், தாலுகா செயலாளர் பெத்தலீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், ஓய்வு பெறும் வயதை உயர்த்திய உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர். அதுபோல், கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், ஆண்டிப்பட்டி, கூடலூரிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story