தேனி மாவட்டத்தில், சிறுமி உள்பட 5 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமி உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு 66 பேருக்கு உறுதியாகி இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்களுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 பேரும் ஓடைப்பட்டியை சேர்ந்தவர்கள். இதில் 60 வயது முதியவர், அவருடைய மனைவி, மகன், மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்றொருவர் 17 வயது சிறுமி ஆவார்.
இவர்கள் 5 பேரும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். இந்த தெருவை சேர்ந்த லாரி டிரைவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் மூலமாக அதே பகுதியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 6 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த சிறுமி உள்பட 5 பேருக்கு நேற்று நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 28 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story