விளாத்திகுளம் அருகே, உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால் சிறுமி தீக்குளிப்பு - 3 தொழிலாளர்களுக்கு வலைவீச்சு
விளாத்திகுளம் அருகே உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால் சிறுமி தீக்குளித்தார். இதுதொடர்பாக 3 தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரபாண்டி மகன் சரவணகுமார் (வயது 24), குகன், வேல்சாமி. கூலி தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து செல்போன் மூலம் 17 வயது சிறுமியை உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டி வந்தனர். இதற்கு அந்த சிறுமி மறுத்ததால், அவரை குடும்பத்தினருடன் சேர்த்து தீ வைத்து எரித்து விடுவதாக, கொலைமிரட்டல் விடுத்தனர்.
தீக்குளிப்பு
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில், குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சரவணகுமார், குகன், வேல்சாமி ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.
இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிறுமி அளித்த வாக்குமூலம் ‘வாட்ஸ்-அப்‘ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story