ஈரோடு ரெயில்நிலையத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக வெள்ளை நிற வட்டம்
ஈரோடு ரெயில்நிலையத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக வெள்ளை நிற வட்டம் போடப்பட்டுள்ளன.
ஈரோடு,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதன் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக சிறப்பு ரெயில் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 500 பேரை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. இவர்களது பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அரசு அனுமதி கிடைத்த உடன் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக ரெயில் நிலையம் முன்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு, வெள்ளை நிறத்தில் வட்டம் போடப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story