நெல்லை மாநகர பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரம்
நெல்லை மாநகர பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் நேற்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர் சதீஷ்குமார் மேற்பார்வையில் தற்போது சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்து. நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றுக்கு தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
பல பகுதியில் கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க தூய்மை பணியாளர்கள் கொசு புகை மருந்து தெளித்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலப்பாளையம்
மேலப்பாளையம் பகுதியில் பிளச்சிங் பவுடர் போடப்பட்டது. அந்த பகுதியில் எந்திரங்கள் மூலம் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் பல இடங்களில் பேட்டரி கார் மூலமும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார பணியில் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story