நெல்லையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் குடை பிடித்து ஆர்ப்பாட்டம்


நெல்லையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் குடை பிடித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 May 2020 4:30 AM IST (Updated: 15 May 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் குடை பிடித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். பொருளாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்கிறது. அதை வாபஸ் பெற வேண்டும்.

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களின் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடை பிடித்து நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சுடலைராஜ், ஜோதி, காமராஜ், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story