மாவட்ட செய்திகள்

திருமழிசையில் காய்கறி வாங்கி வந்த லோடு ஆட்டோ விபத்தில் சிக்கியது: காயம் அடைந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது + "||" + In tirumalicai Vegetable who bought The auto crashed To the injured dealer Coronavirus virus is stable

திருமழிசையில் காய்கறி வாங்கி வந்த லோடு ஆட்டோ விபத்தில் சிக்கியது: காயம் அடைந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது

திருமழிசையில் காய்கறி வாங்கி வந்த லோடு ஆட்டோ விபத்தில் சிக்கியது: காயம் அடைந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது
திருமழிசையில் இருந்து காய்கறி வாங்கிக்கொண்டு லோடு ஆட்டோவில் வந்த காய்கறி வியாபாரி விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தாம்பரம், 

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம் நகராட்சி பகுதியை சேர்ந்த 31 வயது காய்கறி வியாபாரி, அப்பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். 

நேற்று காலை வழக்கம்போல் திருமழிசையில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக்கொண்டு சக வியாபாரிகள் 2 பேருடன் சரக்கு ஆட்டோவில் வந்துகொண்டிருந்தார். தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் வரும்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயம் அடைந்த வியாபாரியை மீட்டு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

முன்னாள் கவுன்சிலர்கள்

அதேபோல் செம்பாக்கம் நகராட்சி காமராஜபுரம் வீர மாமுனிவர் தெரு பகுதியில் 34 வயது காய்கறி வியாபாரிக்கும், சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்த பல்லாவரம் நகராட்சி 62 வயது முன்னாள் கவுன்சிலர் ஒருவருக்கும், செம்பாக்கம் பகுதியில் வசித்துவந்த மாடம்பாக்கம் பேரூராட்சி 45 வயது முன்னாள் கவுன்சிலர் ஒருவருக்கும், குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் 31 வயது ஐ.டி. ஊழியருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 430 ஆனது. இவர்களில் 67 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனைய பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனைய பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
2. நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் திருமழிசையில் காய்கறி அங்காடி இன்று திறக்கப்படுமா? - வியாபாரிகள் சந்தேகம்
சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) காய்கறி அங்காடி திறக்கப்படுமா? என்று வியாபாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை