கடலூர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் வெளி ஆட்கள் செல்ல தடை
கடலூர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் வெளி ஆட்கள் செல்ல தடை தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு.
கடலூர்,
கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 10 பெண் போலீசார், அவர்களுக்கு பயிற்சி அளித்த 4 போலீசார் என 14 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மற்ற போலீசாருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் நோய் பரவாமல் தடுக்க கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்புக்குள் வெளி ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்குள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலியை போலீசார் அமைத்துள்ளனர். இது தவிர அந்த பகுதிக்கு செல்லும் வழியில் போலீசார் நின்று கொண்டு போலீசாரையும், அவர்களின் குடும்பத்தினரை மட்டும் அனுமதிக்கின்றனர். மற்ற வெளி ஆட்களை செல்ல விடவில்லை. கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story