மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்


மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 May 2020 5:01 AM IST (Updated: 15 May 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி கோட்டூர், திருத்துறைப்பூண்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோட்டூர்,

மாணவி ஜெயஸ்ரீயை எரித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி கோட்டூர், திருத்துறைப்பூண்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர செயலை கண்டித்தும், கொலை செய்த நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுருத்தி திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் உஷா தலைமை தாங்கினார்.

இதில்கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன். மாதர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் சுலோச்சனா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, மாதர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ஜானகி அப்பாதுரை, கோட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவி ஜெயஸ்ரீ கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருத்துறைப்பூண்டி

இதேபோல திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே இந்திய மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் தலைவி கவிதா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஊராட்சி உறுப்பினர் குருமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மாணவி ஜெயஸ்ரீயை தீவைத்து எரித்து கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story