மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா + "||" + Fishing festival overlooking curfew near Ulundurpet

உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா

உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா.
உளுந்தூர்பேட்டை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கூடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்கள் திரண்டு தடையை மீறி மீன்பிடி திருவிழா நடத்தி உள்ளனர். அதாவது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றத்தில் பெரிய ஏரி உள்ளது.


இந்த ஏரியில் தற்போது தண்ணீர் வற்றிவிட்டது. அதனால் அப்பகுதி மக்கள் ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

இதையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் நேற்று அந்த ஏரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வலைகளைக் கொண்டும், கைகளால் துளாவியும் ஏரியில் இறங்கி போட்டி போட்டு ரகம், ரகமான மீன்களை பிடித்தனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவிலான மீன்களை அள்ளினர். கெண்டை, கெளுத்தி, கட்லா, விரால், கொரவை உள்ளிட்ட ரக மீன்கள் அதிகளவில் பிடிபட்டன. இந்நிலையில் ஊரடங்கை மீறி நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழா குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்திய பொதுமக்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம்
விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடந்தது. போலீசாரை கண்டதும் 3 கிராம மக்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 86 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கை கடற்படையால் ராமேசுவரத்தை சேர்ந்த 86 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக உடனடியாக அவர்களை விடுவித்தனர்.
3. மீன்பிடி தடைக்காலம், கொரோனா 2-வது அலையால் நாகை மாவட்டத்தில் ஒரு நாளில் ரூ.5 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு
மீன்பிடி தடைக்காலம் மற்றும் கொரோனா 2-வது அலையால் நாகை மாவட்டத்தில் ஒரு நாளில் ரூ.5 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 லட்சம் பேருக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது.
4. “மகிழ்ச்சியின் திருவிழா, உயர்வு” - பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
5. சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா
எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.