கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க கரூர் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கரூரில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கரூர், 

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க கரூர் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கரூரில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன், கோரிக்கைகளை விளக்கி பேசினார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், தொலை தொடர்புத்துறை தொழிலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பாதுகாக்க, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். 

மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீடித்ததை கண்டித்தும், போராடி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க கரூர் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு உறப்பினர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story