மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய போலீஸ் சூப்பிரண்டு


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 15 May 2020 12:02 PM IST (Updated: 15 May 2020 12:02 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம், 

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. 

அப்போது அப்பகுதியில் ஏராளமானோர் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதனை பார்த்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி மற்றும் சோப்புகளை கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது அவசியம் முக கவசம் அணிந்து பேச வேண்டும். அரசு கூறும் சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடிப்பதால் மட்டுமே கொரோனோ நோயிலிருந்து நாம் தப்ப முடியும் என பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

அப்போது ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சென்னையில் போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு பயிற்சி பெறும் கபிலன் கலைச்செல்வன் என்பவர் சார்பில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் கை கழுவும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

Next Story