சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 May 2020 12:37 PM IST (Updated: 15 May 2020 12:39 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பணிபுரிந்து வரும் மருத்துவர்கள்,காவலர்கள் ,பத்திரிகையாளர்கள் என பரவி வருகிறது. அந்த  வகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பெண் மருத்துவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. ஆண்கள் விடுதியில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த 6 மருத்துவர்கள் உடன் தொடர்புடைய நபர்களின் பட்டியல் எடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

Next Story