சங்கரன்கோவில்- பாவூர்சத்திரத்தில் 528 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


சங்கரன்கோவில்- பாவூர்சத்திரத்தில் 528 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 15 May 2020 10:30 PM GMT (Updated: 15 May 2020 4:56 PM GMT)

சங்கரன்கோவில் பாவூர்சத்திரம் பகுதிகளில் 528 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சங்கரன்கோவில், 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிமாநிலம், வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த 190 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 15 நபர், மீன்துள்ளியில் இருந்து 3 பேர், சுரண்டையில் இருந்து தலா 2 பேர், நெல்லையில் இருந்து 4 பேர், விருதுநகரில் இருந்து 4 பேர், திண்டுக்கல்லில் இருந்து 3 பேர், நாகர்கோவிலில் இருந்து ஒருவர், கோவையில் இருந்து 2 பேர் என 34 பேர் புதிதாக கண்டறியப்பட்டு, தற்போது மொத்தம் 224 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

பாவூர்சத்திரம் வட்டார சுகாதார மையத்திற்கு உட்பட்ட ஊர்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து இதுவரை வந்துள்ள 304 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அவ்வப்போது சுகாதாரத்துறையினர் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 5 பேருக்கு 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிவடைந்துள்ளது.

Next Story