கே.வி.குப்பம் அருகே சூறாவளி காற்றில் வீடுகள் மீது விழுந்த செல்போன் கோபுரம்


கே.வி.குப்பம் அருகே சூறாவளி காற்றில் வீடுகள் மீது விழுந்த செல்போன் கோபுரம்
x
தினத்தந்தி 16 May 2020 4:45 AM IST (Updated: 16 May 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே வீசிய சூறைக்காற்றால் செல்போன் கோபுரம் சாய்ந்து வீடுகள் மீது விழுந்தது.

கே.வி.குப்பம்,

கே.வி.குப்பம் அருகே மேல்மாயில் செல்லும் ரோட்டில் மின்சார அலுவலகத்தின் அருகில் சண்முகம் என்பவரின் காலி மனையில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இந்தப்பகுதியில் சூறாவளி காற்று வீசியது. இதில் செல்போன் கோபுரம் திடீரென சாய்ந்து அருகில் இருந்த கோபி, சந்திரன் ஆகியோர் வீட்டு கூரைகள் மீது விழுந்தது. இதில் அருகில் இருந்த சுற்றுச்சுவர், தண்ணீர் தொட்டி ஆகியவை உடைந்தன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்ததும், தொழில்நுட்ப ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கேவி குப்பம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story